ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த அரக்கோணம் தாலுகா நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அரக்கோணம் தாலுகா முழுவதும் கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தடுப் பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், சாலைகளில் மாஸ்க் அணியாமல் சென்ற வர்களுக்கு மாஸ்க்குகளை வழங்கினர். அதேபோல் பல் வேறு இடங்களில் உள்ள கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பணியாற்ற வேண்டும். 50 சதவீத ஊழியர்களை நியமிக்க வேண்டும். கொரோனா விதிமு றைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும். கடை களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தார். இதற்கிடையில். அரக்கோணம் அடுத்த தணிகைப்போளூர் பகுதியில் தாசில்தார் பழனிராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.