வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உடைந்துபோன மற்றும் பயன்படுத் தப்படாத நாற்காலிகள் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு அந்த அறையிலிருந்து ஜன்னல் வழியாக புகை வந்தது. பின்னர், அப்பகுதியினர் அறையில் எட்டிப்பார்த்தனர். அப்போது பயன்படுத்தப்படாத நாற்காலிகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகு தியினர் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, பின்னர், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்த பழைய நாற்காலிகள், பெஞ்சுகள் தீயில் எரிந்து சாம்பலானது. 

தீவி பத்து குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்து நடந்த பள்ளி அருகே இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் பெண்கள் அவ்வழியாக செல்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

எனவே குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க கிராமத்தில் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.