தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 1,52,348 பேராக அதிகரித்துள்ளது. 
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 23,443 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,009 ஆக அதிகரித்துள்ளது. 13,551 பேர் குணமடைந்துள்ளனர்.