குறள் : 618
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி
மு.வ உரை :
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
கலைஞர் உரை :
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.
சாலமன் பாப்பையா உரை :
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
Kural 618
Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu
Aalvinai Inmai Pazhi
Explanation :
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known is disgrace.
இன்றைய பஞ்சாங்கம்
01-01-2022, மார்கழி 17, சனிக்கிழமை, திரியோதசி திதி காலை 07.17 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.42 வரை பின்பு அமாவாசை. கேட்டை நட்சத்திரம் இரவு 07.17 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. ஆங்கில வருட பிறப்பு.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 01.01.2022
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்தால் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஓரளவு சேமிக்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாகலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்த்து எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மீனம்
இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,