லால்பாக், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்று முதல் முன்பதிவில் லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலால் பெரும்பாலான ரயில்கள் இன்னமும் முன்பதிவு செய்தே பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் தினமும் சென்று வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் மாலை 3.30 மணிக்கு பெங்களூர் வரை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று (20ம் தேதி) முதல் 5 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதனால் பயணிகள் முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கி பயணம் செய்யலாம்.
அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் மதியம் 1.35 மணிக்கு மைசூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 முன்பதிவில்லாத பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்படுகிறது.
இந்த ரயிலிலும் முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.