ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில்
அமைந்துள்ள கோயில்களில் எதிர்வரும் 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் இதர கோயில் திரு விழாக்கள் அனைத்தும், தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதி வேகமாக பரவி வருவதன் காரணமாக பக்தர்கள் நேரடியாக பங்குபெறும் கோயில் விழாக்கள் ஆகியவை இம்மாதம் 31ம் தேதி வரை அரசு விதிக்கும் தளர்வுகளுக்கு உட்பட்டு தடை விதிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோயிகளில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் இதர கோயில் திருவிழாக்களை வசதிக் கேற்ப யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்புவது போன்ற ஏற்பாடுகளை செய்து கொள்ள இந்து சமய அறநிலை யத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகள் கடை பிடிக்கப்படுவதை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும்.

இது தொடர்பாக விளம்பர பலகைகளை கோயில்கள் முன்பாக வைக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவ டிக்கைகளை பின்பற்றும் வகையில் அனைத்து பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவு வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.