ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை அரக்கோணம் ஆகிய இரண்டு உட்கோட்டங்கள், சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் 18, அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் 2, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் 2, மதுவிலக்கு அமலாக்க பிரி 2 என்று மொத்தம் 24 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.

ஆயுதப்படையுடன் சேர்த்து மொத்தம் 734 போலீசார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக அரசின் ஆணையின்படி போலீசார் தங்களின் உடல் நலனை காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும் இரண்டாம் நிலை போலீசார் முதல் தலைமை போலீசார் வரை வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படுகிறது.

தினமும் 60 முதல் 80 போலீசார் வார ஓய்வில் செல்கின்றனர் என்றும் இதனால் போலீசார் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.