ராணிப்பேட்டை மாவட்டத்தில் ₹76.67 கோடி மதிப்பில் 23 ஆயிரத்து 578 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
₹76.67 crore jewelery loan discount collector information of 23,578 beneficiaries in Ranipet district

இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றவுடன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, சட்டப்பேரவை விதி எண் 110ம் கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று அறிவித்தார்.

அதன் படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும். ராணிப்பேட்டை சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் நகைக்கடன் வழங்கி வரும் 83 கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 23,578 பயனாளிகளுக்கு ₹76.67 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நகைக்கடன் பெற்ற கூட்டுறவு நிறுவனங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் மற்றும் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி கிளை களின் சார்பில் 2,037 பயனாளிகளுக்கு ₹7.59 கோடி மதிப்பில், 4 நகர் கூட்டுறவு சார்பில் 4,974 பயனாளிகளுக்கு ₹18.07 கோடி மதிப்பில், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங் கங்களின் சார்பில் 11,463 பயனாளிகளுக்கு ₹35.13 கோடி மதிப்பில், 9 நகர கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 4,201 பயனா ளிகளுக்கு ₹13.23 கோடி மதிப்பில், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் சார்பில் 55 பயனாளிகளுக்கு ₹0.14 கோடி மதிப்பில், 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சார்பில் 848 பயனாளிகளுக்கு ₹2.51 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்று 23 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு ₹76.67 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.