காவேரிப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் நேற்று மாலை துறை பெரும்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த வாவிபரை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் முன்னுக்கு பின் தகவல் கொடுத்ததின் பேரில், போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வத்து விசாரணை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.