ராணிப்பேட்டை மாவட்டம் சைபர் கிரைம் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர். அதில் போலீசார் கூறியதாவது. சைபர் குற்றவாளிகள் பல்வேறு சைபர் குற்றங்களின் மூலம் பொது மக்களை ஏமாற்றி பணம் மற்றும் ரகசிய தகவல்களை திருடி வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.


தற்போது மோசடி செய்யும் நபர்கள் இணைவழியில் உங்களிடம் செல்போன் மூலமாக நான்ஸ்டேட் பேங்கில் மேனேஜராக இருக்கிறேன். உங்கள் ஏடிஎம் கார்டு இன்றுடன் காலாவதி ஆகிறது அதைபுதுப்பிக்க வேண்டும் அதனால் உங்கள் ஏடிஎம் கார்டின் 16 இலக்க எண்கள் மற்றும் ஓடிபி எண்கள் சொல்லுங்கள் என்று கேட்டால் பொதுமக்கள் யாரும் எந்த ஒரு வங்கி மேலாளரும் நேரடியாக பொதுமக்களிடம் எந்த ஆவணம் கேட்க மாட்டார்கள் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கி அணுகி உங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவும். உங்கள் நிலத்தில் டவர் அமைக்க வேண்டும் என்று சொல்லி நிலத்தில் ஆவணங்களை பெற்று சிறுக பணத்தை அனுப்ப சொல்லி ஏமாற்று வார்கள் ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.