பிரபல இயக்குநரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குநரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு நீர்ச்சத்து சார்ந்த குறைபாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்தநிலையில் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரின் உடல்நிலையை பரிசோதித்து பார்த்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர அறிவுறுத்தியுள்ளனர். அந்த அறிவுறுத்தலின் படி, இயக்குநர் பாரதிராஜா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நீர்ச்சத்து சார்ந்த குறைபாடுகள் இருப்பதாகவும், புதிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுஒருபுறம் இருக்க அவருக்கு பெரிதான பாதிப்பு ஏதும் இல்லை என்றும அவர் இன்னும் நான்கு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.