தேவையானவை: 

 • முட்டை - 3. 
 • உருளைக்கிழங்கு (பெரியது) 2. 
 • மிளகு ஒரு டீஸ்பூன், 
 • சீரகம் - கால் டீஸ்பூன், 
 • பட்டை - 1. 
 • சோம்பு - கால் டீஸ்பூன், 
 • இஞ்சி - ஒரு துண்டு 
 • பூண்டு - 5 பல், 
 • ரஸ்க் தூள் - 4 டீஸ்பூன், 
 • உப்பு - சுவைக்கேற்ப, 
 • மஞ்சனதூள் - சிறிதளவு, 
 • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை, 

உருளைக்கிழங்கை மண் போகக் கழுவி விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளுங்கன். கொடுத்துள்ள பொருட்களில், மிளகு முதல் பூண்டு வரையிலான பொருட்களை நன்கு அரைத்து மசாலா தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி ஒரு பாத்திரத்தில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, குலுக்கி குலுக்கிவிட்டு வேகவிடுங்கள். ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகனை, முட்டையில் நனைத்து, ரஸ்க் தூளில் போட்டுப் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுங்கள் குழந்தைகளின் வோட்டுகளை அள்ளும் சூப்பர் சாப்ஸ் இது. 

விருந்துகளுக்கு கிராண்டான அயிட்டம்!