60 ஆவது பிறந்தநாளை... திரையுலக நட்சத்திரங்களுடன் ஆடம்பரமாக கொண்டாடி.. அமர்களப்படுத்திய ராதிகா! போட்டோஸ்..!
நடிகை ராதிகா இன்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவரது தோழிகள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பார்ட்டி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.
முதல் படத்தில் கிராமத்து கிளியாக நடித்த ராதிகா, அடுத்தடுத்த படங்களில், மாடர்ன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் மிரள வைத்தார். ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்தது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்க்கு ஏற்றாப்போல் பொருந்தி நடிக்கும் திறமை கொண்டவர் ராதிகா. விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

திரையுலகம் தாண்டி, தன்னுடைய கணவர் சரத்குமார் நடத்தி வரும் கட்சியில் இணைந்து, அவருக்காக பல்வேறு இடங்களில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆனால் அவர் போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் இந்திய சமத்துவ மக்கள் கட்சி தோல்வியை தழுவியதால், மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சீரியல் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

60 வயதிலும் நடிகை ராதிகா, தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில்... மார்டன் உடை அணிந்து, மிகவும் யங்-காக இருக்கிறார். இவரது இந்த பிறந்தநாள் பார்ட்டியில், ஜோதிகா, சினேகா , தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, அம்பிகா, ராதா, நடிகை லதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Fitness trainer - entrepreneur Sarvesh Shashi with Suriya - Jyotika at RadhikaSarathkumar Birthday party 😊

Trisha at Radhika Sarathkumar Birthday party 🥳🎉