Kgs and kgs of Gold seized at Arakkonam railway station

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை தன்பாத் இருந்து ஆலப்புழா சென்ற விரைவு ரெயில் வந்தது. 

இந்த ரெயில் பெட்டிகளில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் இருந்ததை கண்டு ரெயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், அந்த நபரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இறக்கி, ரெயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொண்டு வந்த பணம் மற்றும் நகைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. 

மேலும், இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, ​​நாகராஜ் என்பவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து தங்கம் வாங்கி வந்து கோவையில் தங்க வியாபாரம் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

அப்போது அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்

அதை சுங்கத்துறையிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலே கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.