சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று விருதுகள் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணைய தளத்தில் நாளை ஆக.26க்குள் பதிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.