கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். 
இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், விநாயகரின் மடியில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் அற்புதக் காட்சியை கண்டு தரிசிக்கலாம்.  

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர், கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில், அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட, அவர் களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும், அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.  

அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர், குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து வேத வியாசரின் கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில், அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து, கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார்.அதன் பின்னர், அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். 

கோவில் புதுப்பிக்கப்பட்டு, அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பெற்றது என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.தங்களது இசையைச் சமர்ப்பிக்கின்றனர். புதிய பாடகர்கள், இசை கற்பவர்கள் போன்றோர் இவ்விழாவில் பாடியும், இசை நிகழ்ச்சியை நடத்தியும் இறைவனின் அருளைப் பெறுகின்றனர். இங்கு இசை நிகழ்ச்சி நடத்தவும், பாடல்களைப் பாடவும் கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றிட வேண்டும்.  

முக்குற்றி புஷ்பாஞ்சலி:

இந்த ஆலய வழிபாட்டில் ‘முக்குற்றி புஷ்பாஞ்சலி’ எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக, முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன்பறித்து வந்து, வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து விடுகின்றனர். பின்னர் அதனை எடுத்து, விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தாலும், அந்தத் தோஷம் விலகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை மட்டுமே நடத்தப்படுவதால், இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், கோவிலில் முன் பதிவு செய்து கலந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.  


Malliyoor Sree Maha Ganapathy Temple Kuruppanthara, Kottayam, Kerala,.