தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள அனைத்து வகை பதிவுதாரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாத மும் 2வது வெள்ளிக்கிழமைகளில் வேலுார் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

அதன்படி, இந்த மாதத்துக்கான 2வது முகாம், மேல்மொண வூரில் உள்ள வேலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது.

இதில், 25க்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பத்தாம் வகுப்பு முதல் டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பு பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம் என கெலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.