ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வேதநாயகி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் தியாகு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர், சிபிஎம் மாவட்ட செயலாளர் காசிநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் பி.என்.உதயகுமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். துப்பாக்கிச்சூடு என்ற பெயரில் கொலை வெறியாட்டம் நடத்தி 13 உயிர்களை பறிக்கவும், பலரை காயப்படுத்தவும் பொறுப்பானவர்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள கலெக்டர் மற்றும் பிற வருவாய் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.