பள்ளிப்பதிவேடுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கையொப்பத்தையும், பெயரின் முன்னெழுத்தையும் (இனிஷியல் ) தமிழில் எழுதுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளி மாணவர்கள் இனி தமிழில் கையொப்பமிட்டால் முன்னெ ழுத்தையும் கட்டாயம் தமிழில் எழுத வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பம், வருகைப்பதிவேடு பள்ளி, கல்லூரி முடித்து பெறுகின்ற சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்து தமிழ் பெயருக்கு முன் வழங்க வேண்டும்.

முதல்கட்டமாக பள்ளி தகவல் மேலாண்மை இணையப் பக்கத்தில் ('எமிஸ்') பராமரிக்கப்படும் மாணவர்களின் 30 பதிவேடுகளில் மாணவர்கள்,பெற்றோர்கள் பாதுகாவலர் பெயர்கள் தமிழில் பதிவேற்றம் செய்யும் போது அதனை தமிழ் முன்னெழுத்துடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.