ராணிப்பேட்டை நவல்பூர் மணியக்கார தெரு ரயில்வே மேம்பாலம் அருகில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகள் ராதா, மருமகன் பாலாஜி.

இவரும் ராஜேந்திரனும் சேர்ந்து பேப்ரிகேசன், வெல்டிங் வேலைகள் செய்து வருகின்றனர். ராதா தனியார் தோல் தொழிற் சாலையில் வேலை செய்கிறார்.

நேற்று காலை வழக்கம்போல் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருக்கும் இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு பாலாஜிக்கு ஒரு புதிய வேலை ஒப்பந்தம் ஆகி அவர்கள் ரூ.20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தனராம்.

இதைக்கொண்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்து சாவியை அந்த. அறையிலேயே விட்டு சென்றுள்ளார். 

நேற்று மதியம் பாலாஜி வீட்டுக்கு சாப்பிட வந்த போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப் பட்டிருந்ததாம். இதனால் கதவை தட்டிப்பார்த்து விட்டு திறக்காததால் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார். அந்த கதவும் திறக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சிய டைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் தாறுமாறாக கிடந்தன.

அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் வீடு புகுந்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.