அரக்கோணம் பகுதியில் கஞ்சா விற்ற 2 நபர்கள் மற்றும் பாலியியல் வன்கொடு மையில் ஈடுபட்ட நபர் என3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது வரை பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்து வந்த அரக்கோணம் சாலை கிராமம் சீனிவாசன் (எ)சீனு (23), சஞ்சய் (19) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல காவேரிப் பாக்கம் அடுத்த உப்புமேடு காலனியை சேர்ந்த ராஜ்குமார் (எ) அருள் (29) என்பவர் பாலியியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவானார். காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் பல கட்ட தேடுதல் வேட்டைக்குபிறகு அருளைகைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் மேற்கண்டநபர்கள் மீது பல்வேறு பிரிவில் வழக்குகள் உள்ளதாலும், இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும்வகையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யமாவட்ட எஸ்.பி., தீபா சத்யன், மாவட்ட கலெக்டடர் தெ.பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

இதனடிப்படையில் மேற்கண்ட மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.