ராணிப்பேட்டை அருகே லோடு லாரி மோதியதில் 3 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.
3-year-old girl died after being hit by a truck near Ranipet


ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் வாலாஜா சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள நரசிங்கபுரத்தில் வேகமாகச் சென்ற லோடு லாரி திடீரென மணிகண்டனின் 3 வயது மகள் சவும்யா மீது மோதியது. இதில் சிறுமி சம்பவசம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்.

தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சன்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் தலைமறை வாகியுள்ள லோடு லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.