குறள் : 874

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு

மு.வ உரை :

பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

கலைஞர் உரை :

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்

சாலமன் பாப்பையா உரை :

பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

Kural 874

Pakainatpaak Kontozhukum Panputai Yaalan
Thakaimaikkan Thangitru Ulaku

Explanation :

The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.

Horoscope Today: Astrological prediction for September 16 2022

இன்றைய ராசிப்பலன் - 16.09.2022


இன்றைய பஞ்சாங்கம்

16-09-2022, ஆவணி 31, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.20 வரை பின்பு தேய்பிறை சப்தமி. கிருத்திகை நட்சத்திரம் காலை 09.55 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை 09.55 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla Neram

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 16.09.2022 | Today Rasi Palan 16.09.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட தாமதமாக முடியும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் உதவியுடன் லாபம் அடைவீர்கள். 

ரிஷபம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சலும் பண விரயங்களும் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் விலகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.

தனுசு

இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவ உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001