குறள் : 875

தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்

இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று



மு.வ உரை :

தனக்கு உதவியான துணையே இல்லை பகையே இரண்டு தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.


கலைஞர் உரை :

தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்


சாலமன் பாப்பையா உரை :

தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.


Kural 875

Thandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan

Indhunaiyaak Kolkavatrin Ondru


Explanation :

He who is alone and helpless while his foes are two should secure of them as an agreeable help one (to himself).

Horoscope Today: Astrological prediction for September 17 2022



இன்றைய ராசிப்பலன் - 17.09.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panhangam | Indraya Nalla Neram

17-09-2022, ஆவணி 32, சனிக்கிழமை, சப்தமி பகல் 02.14 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 12.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பைரவர் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


இன்றைய ராசிப்பலன் - 17.09.2022 | Today rasi palan - 17.09.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் நிதானம் தேவை.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நவீன பொருட் சேர்க்கை உண்டாகும். 

மிதுனம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது உத்தமம். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம் மேலோங்கும்.

தனுசு

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்களும் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001