Actor Pugazh Who Gained Fame Through The 'CookWithComali' Show On Vijay TV Got Married To His Long Time Girl Friend Bensiya In Chennai.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபல மாகி, தமிழ் திரையுலகில் வளரும் நகைச்சுவை நடிகராக இருப்பவர் புகழ். 

இவர் சந்தானத்துடன் இணைந்து சபாபதி என்ற படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அஜித் குமாருடன் வலிமை, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் நடித்தார்.

அருண்விஜய்யின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது 'ஜூ கீப்பர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் 6 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் எங்கள் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் புகழ் பேன்ஸி திருமணம் நேற்று நடந்தது. 

இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி னர். திருமண புகைப்படங்களை புகழ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.