லப்பைபேட்டையில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது லப்பைபேட்டை, டாஸ் மாக் கடை அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படிநின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில் அதே ஊர் பஜனைக்கோயில் தெருவை சேர்ந்த நிகேஷ்குமார் (20) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
நிகேஷ்குமாரை கைது செய்து 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.