திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், ஆவின் பால் கூட்டுறவு சங்கம் அருகே உள்ள பங்களா தெருவை சேர்ந்தவர் ரமேஷ். ரைஸ் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் யாழினி (3).

நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டின் வெளியே குழந்தை யாழினி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர், யாழினி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யாழினி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தகவலதகவலறிந்த திமிரி போலீசார் விரைந்து சென்று, குழந்தை யாழினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் ஆரணி தாலுகா 12 புத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜியை தேடி வருகின்றனர்.