ராணிப்பேட்டை புதிய ரொட்டிக்கார தெருவில் வசித்து வரும் பிரபு. (30) அதே பகுதியில் வசித்து வரும் வினோத்(32). இரு வருக்கும் முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் காரை முனியன் தெருவில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரபுவை வினோத் வைத்திருந்த பழம் அறுக்கும் கத்தியால் காது, கை மணிக்கட்டில் அறுத்ததில் அவர் படுகாயமடைந்தார்.

இதை தடுக்க வந்த அதே பகுதியில் வசித்து வரும் சிவகாமி(50) என்ப வரையும் வினோத் எட்டி உதைத்து காயப்படுத்தி யுள்ளார்.

படுகாயமடைந்த பிரபு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ராணிப் பேட்டை போலீசில் அவ ரளித்த புகாரின்பேரில் எஸ்ஐ ஜான்சேவியர் வினோத்தை நேற்று கைது செய்தார்.