காவேரிப்பாக்கம் அடுத்த துறைபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (27). ஐடிஐ படித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த குமுதப்பிரியா (19) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த 24 ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

நேற்று ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகம் வந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அதன்படி அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.