1926ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நாடுகளின் கூட்டமைப்பில் (League of Nations) ஜெர்மனி சேர்ந்தது. 

1991ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி யுகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது. 

1959ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ஆசிய தொழில்நுட்பக் கழகம், பாங்காக் நகரில் நிறுவப்பட்டது.


முக்கிய தினம் :-


தேசிய கண் தான தினம்


👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25-ல் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8-ல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.உலக எழுத்தறிவு தினம்

📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📝 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம்; தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

📝 இதன் அடிப்படையில் 1965ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில்தான் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 

📝 தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.


நினைவு நாள் :-


குன்னக்குடி வைத்தியநாதன்


🌟 பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள்.

🌟 வயலின் கற்றுக்கொண்டு தனது 12வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976ஆம் ஆண்டு முதல் வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.

🌟 1969ஆம் ஆண்டு 'வா ராஜா வா' என்ற திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப்பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🌟 'வயலின் சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் தனது 73வது வயதில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


தேவன்


✍ பிரபல நகைச்சுவை எழுத்தாளருள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார்.

✍ இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர் சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார்.

✍ நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, அன்றைய நாட்டு நிலவரம் ஆகியவை குறித்து மிக நேர்த்தியாகவும், எளிமையான நகைச்சுவையோடும் கூறுவது இவரது படைப்புகளின் சிறப்பம்சம் ஆகும்.

✍ ஆங்கிலக் கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டார். வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ் என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

✍ கால் நூற்றாண்டு காலத்து கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உலக விஷயங்களை யதார்த்தமான, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுத்திய தேவன் தனது 44-வது வயதில் (1957) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


617 – லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது.

1198 – பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார்.

1276 – இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1331 – இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.

1380 – குலிக்கோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன.

1504 – மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது.

1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன.

1522 – பெர்டினென்ட் மகலனின்: விக்டோரியா கப்பல் தனது முதலாவது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு செவீயா திரும்பியது.

1565 – மே 18 இல் ஆரம்பமான மால்ட்டா மீதான உதுமானியரின் முற்றுகை முடிவடைந்தது.

1655 – வார்சாவா நகரம் சுவீடனின் ஒரு சிறிய படையிடம் வீழ்ந்தது.

1727 – இங்கிலாந்து, பர்வெல் என்ற இடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

1761 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் சார்லட்டைத் திருமணம் புரிந்தார்.

1775 – மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது.

1796 – பிரெஞ்சுப் படையினர் ஆத்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர்.

1831 – நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.

1860 – லேடி எல்ஜின் என்ற நீராவிக் கப்பல் மிச்சிகன் ஏரியில் மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழந்தனர்.

1888 – லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சேப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1905 – தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.

1914 – முதலாம் உலகப் போர்: போரின் போது அணியை விட்டு வெளியேறிய பிரித்தானியப் படைவீரர் தோமசு ஐகேட்டு என்பவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1923 – கலிபோர்னியாவில் ஏழு அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின, 23 மாலுமிகள் உயிரிழந்தனர்.

1925 – எசுப்பானியப் படைகள் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையில் மொரோக்கோவில் தரையிறங்கின.

1926 – செருமனி உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது.

1933 – ஈராக்கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார்.

1934 – நியூ செர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 137 பேர் உயிரிழந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகளின் லெனின்கிராட் முற்றுகை ஆரம்பமானது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தத்தைப் பொது மக்களுக்கு அறிவித்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: வி-2 ஏவுகணை மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.

1945 – சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.

1946 – பல்கேரியாவில் முடியாட்சி பொது வாக்கெடுப்பு மூலம் ஒழிக்கப்பட்டது.

1954 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது.

1970 – நியூயார்க் நகரில் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து வானூர்தி ஒன்று புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.[1]

1974 – வாட்டர்கேட் சர்ச்சை: பதவியில் இருக்கும் போது குற்றங்கள் இழைத்தமைக்காக ரிச்சார்ட் நிக்சனுக்கு மன்னிப்பு வங்கும் உத்தரவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் கையெழுத்திட்டார்.

1978 – கறுப்பு வெள்ளி: தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.

1989 – டென்மார்க்கில் விமானம் ஒன்று வட கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் உயிரிழந்தனர்.

1991 – மாக்கடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.

1994 – அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் விமான நிலையத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 132 பேரும் உயிரிழந்தனர்.

2006 – இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

2016 – நாசா ஒசைரிசு-ரெக்சு என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023 இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பிறப்புகள்


1157 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (இ. 1199)

1841 – அன்டனின் டுவோராக், செக் நாட்டு இசையமைப்பாளர் (இ. 1904)

1887 – சுவாமி சிவானந்தர், அத்வைத வேதாந்த குரு (இ. 1964)

1913 – தேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (இ. 1957)

1915 – என். வி. எம். கொன்சாலெசு, பிலிப்பீனிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999)

1926 – பூபேன் அசாரிகா, இந்தியக் கவிஞர், இயக்குநர் (இ. 2011)

1933 – ஆஷா போசுலே, இந்தியப் பாடகி

1944 – பத்மினி பிரியதர்சினி, தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞர், நடிகை (இ. 2016)

1946 – அசீசு சாஞ்சார், நோபல் பரிசு பெற்ற துருக்கிய-அமெரிக்க வேதியியலாளர்

1954 – மைக்கல் செர்மர், ஐயுறவாளர் சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்க வரலாற்றாளர்

1962 – தோமஸ் கிரெட்ச்மன், செருமானிய நடிகர்

1971 – மார்ட்டின் பிறீமன், ஆங்கிலேய நடிகர்

இன்றைய இறப்புகள்


1613 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1566)

1851 – மக்சிம் கோவலவ்சுகி, உருசிய சமூகவியலாளர் (பி. 1916)

1895 – ஆடம் ஓப்பெல், செருமானிய பொறியியலாளர் (பி. 1837)

1939 – சுவாமி அபேதானந்தர், இராமகிருஷ்ணரின் சீடர் (பி. 1866)

1943 – ஜுலியஸ் பூசிக், செக் நாட்டு ஊடகவியலாளர் (பி. 1903)

1960 – பெரோஸ் காந்தி, இந்திய அரசியல்வாதி, பத்திரிக்கையாளர் (பி. 1912)

1978 – சாண்டோ சின்னப்பா தேவர், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் (பி. 1915)

1980 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1908)

1981 – ஹிடேகி யுகாவா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர் (பி. 1907)

1982 – சேக் அப்துல்லா, சம்மு காசுமீர் அரசியல்வாதி (பி. 1905)

1983 – வி. காராளசிங்கம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, எழுத்தாளர், வழக்கறிஞர் (பி. 1921)

1985 – ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1887)

2003 – லெனி ரீபென்ஸ்டால், செருமானிய நடிகை, இயக்குநர் (பி. 1902)

2008 – குன்னக்குடி வைத்தியநாதன், தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1935)

2010 – முரளி, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1964)

2011 – ஆடற்கோ, தமிழகக் கவிஞர், இதழாசிரியர்

2012 – பில் மாக்ரிட்ஜ், ஐடியோவைத் தோற்றுவித்த ஆங்கிலேய-அமெரிக்கர் (பி. 1943)

2019 – ராம் ஜெத்மலானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1923)

2021 – புலமைப்பித்தன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் (பி. 1935)

இன்றைய சிறப்பு நாள்


மரியாவின் பிறப்பு (கத்தோலிக்க திருச்சபை), (ஆங்கிலோ-கத்தோலிக்கம்)

தேசிய நாள் (அந்தோரா)

வெற்றி நாள் (பாக்கித்தான்)

வெற்றி நாள் (மால்ட்டா)

விடுதலை நாள் (மாக்கடோனியக் குடியரசு, யுகோசுலாவியாவில் இருந்து 1991)

தேசிய கண் கொடை நாள் (இந்தியா)

அனைத்துலக எழுத்தறிவு நாள்

உலக இயன்முறை மருத்துவ தினம்