திருச்செந்தூரில்சூரசம்ஹாரம் 

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில், 6 நாள் ஸ்கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சூரசம்ஹாரம் அக்டோபர் 30 தேதி வருகிறது. சஷ்டி திதி அக்டோபர் 30 ஆம் தேதி காலை தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி காலை முடிவடைகிறது

திருசெந்தூர்: கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நாளான சூர சம்ஹாரம் 30.10.2022அன்று திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற உள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களால் திருச்செந்தூரில் கோவில் வளாகமும் கடற்கரை பகுதியும் மனித தலைகளாக காட்சி அளிக்கும். கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா என்று சொல்லும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
 செல்வம் பலித்துக் கதித்தோங்கும் 
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் 
கந்த சஷ்டி கவசந்தனை... 

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் சூரசம்ஹார திருவிழா இந்த ஆண்டு, 30.10.2022அனறு நடைபெறும்


 திருச்சீரலைவாய் என்று சொல்லப்படும் திருச்செந்தூரில் நடைபெறவிருக்கிறது.

இதற்காக பக்தர்கள் அனைவரும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை திதிக்கு மறுநாளான பிரதமை திதியில் தொடங்கி 6ஆம் நாளான சஷ்டி திதி வரையில் விரதம் இருந்து 6ஆம் நாளில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், தங்களின் விரதத்தை முடிப்பது என்பது 

ஐதீகம்
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் கந்தனாகிய முருகப்பெருமான சஷ்டி திருநாளில் விரதமிருந்து வழிபடுவது தான் கந்த சஷ்டி விரதம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். கிராமத்து பழமொழியில் சொல்வதானால், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும், என்று. ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்னவென்றால், திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக, முருகப்பெருமானை நினைத்து ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியில் ஆரம்பித்து ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி வரை விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்த உடன் விரதத்தை முடித்தால், நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிச்சயம். மனதை அடக்கும் கந்தன் கந்த சஷ்டி விரதம் எல்லாம் சரி, ஆனால் கந்தன் என்றால் என்ன தெரியுமா. கந்து+அன்= கந்தன், அதாவது, கந்து என்றால் யானையை கட்டிப்போடும் தூண். விளக்கமாக சொல்வதென்றால், எதற்கும் அடங்காமல் நான் தான் பெரியவன் என்ற மமதையில் தரிகெட்டுத் திரியும் மனதை அடக்கி இறைவன் என்ற தூணோடு சேர்த்து கட்டுதல் என்பதாகும். இதன் காரணமாகவே முருகப் பெருமானுக்கு கந்தன் என்ற பெயர் வந்தது. 

அழகன் முருகன் அமாவாசைக்கு பின், வளரும் சந்திரன் பொதுவாகவே மந்தமாகவே இருக்கும். ஆனால், ஆறாம் நாளான சஷ்டி திதியில் மட்டும் அரை நிலவாகி வசீகரிக்கும் தோற்றத்துடன் இருக்கும். அது சரி முருகன் என்றைக்கும் அழியாத அழகன் என்பது தானே அர்த்தம். இதில் இன்னொரு அறிவியல் உண்மையும் மறைந்துள்ளது. அரைநிலவு நாளில், நிலவில் இருந்து வெளிப்படும் ஈர்ப்பு விசையானது சரிவிகித அளவோடு இருக்கும். இதன் காரணமாக இயற்கையும் எந்தவித சீற்றமும் இல்லாமல், கடல் கொந்தளிப்பு இல்லாமல், ஏகாந்தமாக அமைதியாக காணப்படும். ஆட்கொண்ட இறைவன் பொதுவாக தேவர்களுக்கும், முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கும் துன்பம் விளைவித்து அட்டூழியம் செய்யும் அசுரர்களை, முழுமுதல் கடவுளான விநாயகர் முதல் சிவன், விஷ்ணு, பராசக்தி என அனைத்து தெய்வங்களும் வதம் செய்து அவர்களை அழிப்பது தான் வழக்கம். அதற்கு மாறாக, முருகப்பெருமான் அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்தொழிக்காமல், அவர்களை மன்னித்து தடுத்து தன்னுடனேயே ஆட்கொண்டதால் தான், அதனை சம்ஹாரம் என்று சொல்கிறோம். இதற்கு அர்த்தம் பகைவர்களையும் மன்னித்து அருள்பாலிப்பதே ஆகும். 
அகந்தை அழித்த முருகன் சம்+ஹாரம்=சம்ஹாரம். சம் என்றால் அழகு, அன்பு, சுத்தம், வெற்றி, நன்மை என பல அர்த்தம் உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், இத்தனையையும் நமக்கு கொடுப்பது சம்ஹாரம் ஆகும். நம்மிடம் உள்ள தீய குணங்களையும், நான் என்ற அகந்தையையும் விட்டொழித்தால் தான் நமக்கு இத்தனை நன்மைகளும் கிடைக்கும். 

முருகன் அருள் கிடைக்கும் ஆகவே, சஷ்டி திருநாளில் விரதம் இருந்து, சூரசம்ஹாரம் நடைபெறும் நாளன்று, நான் என்ற அகந்தையை விட்டொழித்து, அழகன் முருகப்பெருமானிடம் இருந்து, அழகு, அன்பு, பிறப்பு, சுத்தம், நன்மை, வெற்றி என்ற சகலத்தையும் வேண்டிப்பெறுவோம். அதுமட்டுமில்லாமல், சிவனின் அம்சமான ஆறு முகத்தையும், அதாவது தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம். அதோமுகம் என ஆறு முகங்களையும் ஒரு சேர முருகப் பெருமான் வடிவில் வணங்கி அவன் அருள் பெறுவோம். 

கந்த சஷ்டி உருவான கதை


படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சகன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சகன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவவலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காசிபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித் தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாகப் பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.

இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக்கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.
அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க, அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். திருக்கரத்தில் வேலேந்திக்கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை என்றார். 
அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர்.

சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். உலகை ஆள வந்த முருகன் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். முருகன் அசறவில்லை. முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு, அது பாவமென்றும் அவன் கருதினான். 

அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார்.அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. உன்னைப் பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தைச் சுருக்கி சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலைதூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல்பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்து, ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்,சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே. 
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

ஜோதிடத்தில் சஷ்டி விரதம்


இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.
ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப் போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள் முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.

ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய 
ஜோதிடம்.

மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் குழந்தை வேலப்பராகிய முருகனுக்கும் உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டியின் ஆறாம் நாள் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையுடன் கூடிய சஷ்டி திதியில் அமைந்திருப்பதும் ஆத்மகாரகனாகிய சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தில் அமைந்திருப்பதும் கோசாரக குருபகவான் செவ்வாயின் வீட்டில் நின்று காலபுருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தை பார்ப்பதும் இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பதை உணரமுடிகிறது.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷத்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகள் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கும் வழக்குகள், தொடர்ந்து தொல்லை தரும் சத்ருகள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் இந்த ஆறு நாட்களில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வணங்கி வரத் தொல்லைகள் முற்றும் நீங்கி நிம்மதியைத் தரும் என்பது நிதர்சனம்.

நாழிகினரு மகிமை


நாழிகினரு, ஒரு நன்னீர் நீரூற்று மூலம் புனிதமான கிணறு, கோயிலுக்கு 100 மீ (330 அடி) தெற்கே அமைந்துள்ளது. பக்தர்கள் கடலில் குளித்தபின் கிணற்றில் இருந்து தண்ணீரில் குளிப்பதன் மூலம் ஒரு சடங்கு சுத்திகரிப்புக்கு உட்படுகிறார்கள். 

திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன
தீராத நோய் தீர்க்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி

திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் பன்னீர்இலை விபூதி விஷேசமானது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது போல வேறு எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை. 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா நடைபெறும் இந்த நேரத்தில் பன்னீர் இலை விபூதி குறித்த புராண கதைகளைப் பற்றியும் இலை விபூதியின் சிறப்புகளைப் பற்றியம் பார்க்கலாம்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரையில் நின்றார் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின. எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம்.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.

திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும். பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் – நோய்கள் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம்
ஸுப்ரமண்ய புஜங்கத்துல 23வது ஸ்லோகத்துலயும், 24வது ஸ்லோகத்துலயும், ‘என்னுடைய மனக் கவலைகள், மனோ வியாதிகளை எல்லாம் போக்கணும் முருகா’ன்னு வேண்டிண்டார். இன்னிக்கு 25வது 
ஸ்லோகம்.

अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |
பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||

அப்படின்னு ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துல அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயார்சம், ப்ரமேஹம், ஜ்வரம்,குல்மாதி ரோகா: .. இத்தனை ரோஹங்களைச் சொல்றார்.

வலிப்பு, குஷ்டம், க்ஷயம், சுவாச ரோகம், மேஹ ரோகம், ஜ்வரம், சித்த பிராந்தி, வயிற்று வலி இப்படிப் பல விதமான வியாதிகள் உடம்பைப் படுத்தறது. மனசுல இருக்கிற கவலைகளாவது அது பாட்டுக்கு இருக்கும். நாம காரியங்கள் பண்ணிண்டு இருக்கலாம். உடம்பைப் படுத்தி கீழ தள்ளிடுத்துன்னா, வாழ்க்கையே அர்த்தம் இல்லாம இருக்கும். அதற்கப்புறம் உடம்பையும் வெச்சுண்டு, மனசையும் உற்சாகப் படுத்திண்டு காரியங்கள் பண்றதுக்குள்ள ரொம்ப திணற வேண்டியிருக்கும். அப்படி உடம்புக்கு வர்ற வியாதிகளை எல்லாம் போக்கிக்கிறதுக்கு ஒரு உபாயம் இருக்கு. அது என்னன்னா, திருச்செந்தூர்ல பன்னீர் இலைல வெச்சு ஒரு விபூதி கொடுக்கறா. அந்த விபூதியை நெத்தியில இட்டுண்டு, உடம்பெல்லாம் பூசிண்டா, அப்படி சொல்றதே அதிகப்படிங்கறார். ‘பவத் பத்ர பூதிம் விலோக்ய’ இந்த பத்ர பூதியைக் கண்ணால பார்த்த மாத்திரத்திலேயே பூத ப்ரேத பிசாசங்கள், ப்ரம்ம ராக்ஷசர்கள், இன்னும் எல்லா வியாதிகளும், ஒரு க்ஷணத்தில் ஓடி மறைந்து விடுகின்றன. ‘க்ஷணாத் த்ரவந்தே ‘ ன்னு சொல்றார். அந்த பன்னீர் இலைல வச்சு கொடுக்கற விபூதிக்கு அவ்வளவு மகிமை. முதல்ல சொல்லும் போது ‘தாரகாரே’ – ‘தாரகனுக்கு எதிரியான ஸுப்ரமண்ய ஸ்வாமியே! உன்னுடைய கோவில்ல பன்னீர் இலைல வெச்சு கொடுக்கற விபூதியை இட்டுண்டா, எல்லா விதமான வியாதிகளும்போய்டும்’ அப்படின்னு சொல்றார்.

வேதங்கள் எல்லாம் சேர்ந்து தங்களுடைய ‘ஸுமனஸ்’னால அழகழகான வாசனைப் புஷ்பங்களை எல்லாம் முருகனுடைய பாதத்துல போடணும்ன்னு ஆசைப் பட்டு ஒரு வ்ருக்ஷ ரூபமா ஸ்வாமி சன்னிதியில வந்து இருக்காம். அதைத்தான் பன்னீர் வ்ருக்ஷம்ன்னு சொல்றா. அந்த பன்னீர் வ்ருக்ஷத்தோட கிளைகள் எல்லாம் வேத சாகைகள். அந்த வ்ருக்ஷத்தோட இலைகள் எல்லாம் வைதீக மந்திரங்கள். அந்த வைதீக மந்திரத்தில ப்ரணவ ஸ்வரூபமாகிய ஸ்வாமி சம்பந்தப்பட்ட விபூதியை வச்சு கொடுக்கறாதனால, அதை நாம இட்டுண்டா எல்லா உபாதைகளும் போய்டறது. ரொம்ப ஆரோக்யத்தோட தீர்க்காயுசா இருப்பா அப்படின்னு சொல்றார்.

ஒவ்வொரு கோவிலுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி முதற்கொண்டு அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் வரை அடங்கும். அப்படி பார்த்தோமானால் திருப்பதி என்றதும் பெருமாளுக்கு நிகராக அங்கு கொடுக்கப்படும் லட்டு தான் நம் அனைவரின் நினைவிற்கும் வரும். அது போல பழனிக்கு சென்று வந்தவர்களிடம் நாம் தவறாமல் கேட்பது பழனி பஞ்சாமிர்தம். சபரிமலைக்கு சென்று வருபவர்கள் தவறாமல் கொண்டு வருவது அரவணப் பாயாசமும்,அபிஷேக நெய்யும்.இதே போல் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்கப்படுகிறது. இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. அப்படி என்ன சிறப்பு பன்னீர் இலை விபூதிக்கு?

திருச்செந்தூரில் சூரபத்மாதியர்களை வதம் செய்து விட்டு,வெற்றி வீரனாக, தேவ சேனாதிபதியாக நின்ற முருகப் பெருமானின் பெருமைகளை துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலாண்டவரின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் இந்த வேத மந்திர சக்திகள் நிறைந்து இருக்கிறது என்பது நம்பிக்கை. பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. பன்னிரெண்டு கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம்.

பன்னீர் இலை விபூதி மகிமை


ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், அபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார். வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்த சங்கரரின் கனவில் இறைவன் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, திருசெந்தூர் வந்தடைந்த, ஆதிசங்கரர், இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, அவருக்கு இறை தரிசனம் கிட்டியது.
இலை விபூதியைப் அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியாதா?என்ற கேள்வி நம் மனதில் எழக் கூடும். மக்களுக்கு இலை விபூதியின் பெருமையை வெளிப்படுத்த இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் தான் இந்த சம்பவம்.

அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார்.

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.
இன்றளவும் விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறாது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பன்னீர் இலை விபூதியை பக்தர்கள் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று அதை பொக்கிஷமாக பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி,வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்துகொண்டு பயனடைகிறார்கள்.

நாமும் சரவண பவாய நமஹ என்று ஓதி இலை விபூதியைத் தரித்து கொள்ளவேன்டும்.

நமக்கு சென்னைக்குப் பக்கத்தில திருத்தணி இருக்கு. திருத்தணி முருகரையும் பவரோக வைத்யநாத பெருமாள் ன்னு சொல்லுவா. (‘நிலையாத சமுத்திரமான’ எனத் தொடங்கும் திருப்புகழ்). வியாதிகள் போகணும்ன்னு திருத்தணி முருகன் மேல அருணகிரி நாதருடைய ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு. அதைப் படிச்சா எல்லா வியாதிகளும் நிவர்த்தி ஆகும் அப்படின்னு நம்பிக்கை. அந்தத் திருப்புகழைப் படிக்கிறேன்.

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயிறீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத படியுன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடியசுரர் பதாதி மடிய அநேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவராட வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதிலுறை முகிலூர்தி தருதிரு மாதின் …… மணவாளா
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே.
‘நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே!
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!’ ன்னு பாடல்.

ஸூப்ரமண்ய புஜங்கத்தைப் படிச்சா வியாதிகள் போகும், அப்படின்னு மஹா பெரியவா ரெண்டு மூணு இடத்தில ‘தெய்வத்தின் குரல்’ல சொல்லியிருக்கா. ‘உடம்பு ஸ்வஸ்தம் ஆகிறதுக்கு சுப்ரமண்ய புஜங்க பாராயணம்’ அப்படின்னு சொல்லியிருக்கா. இந்த முப்பத்து மூணு ஸ்லோகத்தையும் படிக்க நேரம் இல்லேன்னா கூட அந்த,

कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥१९॥

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட |
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் ||

அப்படின்னு முருகப் பெருமானுடைய நாமங்கள் இருக்கக் கூடிய அந்த 19வது ஸ்லோகத்தை நிறைய ஆவர்த்தி பண்ணிட்டு விபூதியை இட்டுண்டா போதும். ஒரு வாட்டி திருச்செந்தூர் போகும் போது பன்னீர் இலையில கொடுக்கற விபூதியை வாங்கிண்டு வந்து நம்மாத்து விபூதியோட சேர்த்துக்க வேண்டியது, அந்த விபூதியை இந்த ஸ்லோகத்தைச் சொல்லி இட்டுண்டா வியாதிகள் எல்லாம் போய்டும். இந்த பில்லி சூன்யம் மாதிரி எந்தக் கவலையும் இருக்காது.