சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹிந்தர் (38), வியாபாரி. இவர் தனது காரில் அவரது மனைவி பபிதா, தம்பி கோபால் ஆகியோருடன் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து பெங்களூரு சென்றார். காரை சென்னை சேத்துப்பட்டு புதிய பூபதி நகரைச் சேர்ந்த கோபி (36) என்பவர் ஓட்டி வந்தார். 

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத் தாக்கு சந்திப்பு பகுதியில் வந்த போது வேலூரில் இருந்து வேகமாக ஆம்புலன்ஸை ஓட்டி வந்த பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பிரேம்குமார் (31) என்பவர் எந்த விதமான சிக்னல் தராமல் திடீ  ரென குறுக்கே திருப்பி உள்ளார்.

இதில் டிரைவர் கோபி ஓட்டி வந்தகார் ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் கோபிகாரில் வந்த ஹிந்தர், கோபால், ஆம்புலன்ஸ் டிரைவர் பிரேம்குமார் மற்றும் ஆம்புலன்சில் வந்த ஷம்ஷீல் ஹக் (65) என்ற முதியவர் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இது குறித்து கோபி ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்ஐ பாலாஜி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவருகிறார்.