குறள் : 890

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போ டுடனுறைந் தற்று


மு.வ உரை :

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.


கலைஞர் உரை :

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்


சாலமன் பாப்பையா உரை :

மனப்பொருத்தம் இல்லா?தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.


Kural 890

Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul

Paampotu Utanurain Thatru


Explanation :

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.


Horoscope Today: Astrological prediction for October 02 2022


இன்றைய ராசிப்பலன் - 02.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

02-10-2022, புரட்டாசி 15, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி மாலை 06.47 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.52 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 01.52 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 02.10.2022 | Indraya Raasi Palan 

மேஷம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு நீங்கும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கடகம்

இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தடைபட்ட முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். 

சிம்மம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

கன்னி

இன்று தொழில் வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். பயணங்களினால் ஆரோக்கிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். 

துலாம்

இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். வியாபார விருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். 

மகரம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் உதவியால் ஒரு தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001