ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சப் டிவிஷன் ஏஎஸ்பியாக யாதவ் கிரிஷ் அசோக் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு சப் டிவிஷன் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஏஎஸ்பி நிருபர் களிடம் பேசியதாவது:
அரக்கோணம் சப்டிவிஷனில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை போலீசார் கன்னியத்துடன் நடத்த வேண்டும். அரக்கோணம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ரவுடி கும்பல்களை முழுமையாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கொள்ளை கஞ்சா, குட்கா, காட்டன், வெளி மாநில லாட்டரி விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.