ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 2022 அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (28ம் தேதி- வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, பராமரிப்புத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துதுறை, பால் வளத்துறை உள்ளிட்டபல் வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்னைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனி நபர் பிரச்னைகளை மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.