ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் நசீமா (42). நேற்று முன்தினம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார்கள். 

இந்நிலையில் அதிகாலை வீட்டில் உள்ள அறையில் திடீரென தீப்பிடித்து உள்ளது. இதைக்கண்ட குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு எழுந்து வீட்டிற்கு வெளியே ஓடி வந்தனர். 

இது குறித்து ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்தந்தனர். 
நிலைய அலுவலர் ரா.பரிமளாதேவி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்து அக்கம்பக்கம் பரவாமல் தடுத்தனர்.

ஆனால் அதற்குள் வீட்டில் புதிதாக வாங்கி வைத்திருந்த பீரோ. கட்டில் மற்றும் துணி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக மேற்கண்ட தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். 

இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.