குறள் : 894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்

காற்றாதார் இன்னா செயல்


மு.வ உரை :

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல் தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


கலைஞர் உரை :

எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்


சாலமன் பாப்பையா உரை :

அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.


Kural 894

Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku

Aatraadhaar Innaa Seyal


Explanation :

The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).


Horoscope Today: Astrological prediction for October 06 2022இன்றைய ராசிப்பலன் - 06.10.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

06-10-2022, புரட்டாசி 19, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.41 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.42 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 06.10.2022 | Today rasi palan - 06.10.2022

மேஷம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான பணிகளை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உற்றார் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். 

தனுசு

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன் உண்டாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை பெறலாம். 

கும்பம்

இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உத்தியோக நிமித்தமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001