அமைச்சர்துரைமுருகன் தேர்தல் வாக்குறுதியாக காட்பாடி தொகுதி சேர்காட்டில் மல்ட்டி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி கொண்டு வருவேன் என்றார்.

இந்நிலையில் சேர்க்காட்டில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.14.6 கோடி செலவில் தாலுகா அரசு ஆஸ்பத்திரி கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி அமையும் இடத்தை அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டனர். இந்த ஆஸ்பத்திரி 60 படுக்கைகள் கொண்டதாக இருக்கும். தரைத்தளத்துடன் மூன்றடுக்கு கொண்டதாக இருக்கும். அதில், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், முழு வசதியுடன் கூடிய மருத்துவ பரிசோதனை கூடம், மருந்தகம் ஆகியவை இருக்கும்.

மேலும், இந்த ஆஸ்பத்திரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைவதால் அவசர சிகிச்சை பிரிவையும் அமைக்கலாம் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆய்வின்போது வேலூர் கலெக்டர் குமார வேல்பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார், மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் பானுமதி, திரு வலம் டவுன் பஞ்.துணைத் தலைவர் நேரு, காட்பாடி பஞ். யூனியன் துணைத் தலைவர் சரவணன், காட் பாடி தாசில்தார் ஜெகதீஸ் வரன், சேர்க்காடு பஞ். தலைவர் பத்மநாபன் மற் றும் உள்ளாட்சி பிரதிநிதி கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.