👉 1920ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சூறாவளி காற்றின் வலிமையை அளவிடும் (ஃபுஜிதா அளவீடு) நுட்பத்தைக் கண்டறிந்த ஃபுஜிதா டெட்சுயா (Fujita Tetsuya) ஜப்பானில் பிறந்தார்.


👉 1911ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல்முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது.


பிறந்த நாள் :-


கிட்டூர் ராணி சென்னம்மா 

🏁 இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா 1778ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் பிறந்தார்.

🏁 இவர் சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சல்காரப் பெண் என்றும் பெயர் பெற்றுள்ளார். மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தை கைப்பற்ற ஆங்கில அரசு முடிவு செய்தது.

🏁 நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து போராடிய ராணியின் வீரர்களால் ஆங்கிலேய வீரர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார்.

🏁 புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் சென்னம்மா தனது சிறை வாழ்வை கழித்தார். இவர் தன்னுடைய 50வது வயதில் சிறையிலேயே (1829) மறைந்தார்.

🏁 விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.


அரவிந்த் அடிகா 

✍ சிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் ஒருங்கே பெற்ற அரவிந்த் அடிகா 1974ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

✍ இவர் 1990-ல் நடந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

✍ இவரது முதல் புதினம் தி ஒயிட் டைகர் (The White Tiger) 2008-ல் மேன் புக்கர் பரிசு பெற்றது. இவர் நாவல்கள் மட்டும் இல்லாமல் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்.


இன்றைய நிகழ்வுகள்


கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான்.

425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.

1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.

1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன.

1694 – வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர்.

1707 – பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.

1739 – பிரித்தானியப் பிரதமர் ராபர்ட் வால்போல் எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெசுட்போர்ட் சமரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை மிசூரி வெசுட்போர்ட் சமரில் தோற்கடித்தன.

1870 – பிரான்சின் மெட்சு என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் புருசியா வெற்றியடைந்தது.

1906 – அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிசு நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்க விட்டார்.

1911 – முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.

1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.

1915 – நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1917 – லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

1929 – 1929 வால் வீதி வீழ்ச்சி. பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது.

1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோவை நாட்சி செருமனி கைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் அல்-அலமைன் சண்டை: வடக்கு எகிப்தில், பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

1942 – அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்து 12 பேரும் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.

1946 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.

1955 – பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.

1956 – அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது.

1958 – நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.

1966 – ஐக்கிய நாடுகள் அவை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

1983 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – கம்யூனிச அங்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு அங்கேரியக் குடியரசு நிறுவப்பட்டது.

1991 – கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

1991 – ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

1993 – பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசுப் படை குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1998 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஆகியோருக்கிடையில் "அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

2001 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.

2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

2002 – மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

2004 – வடக்கு சப்பானில் நீகாட்டாவில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 2,200 பேர் காயமடைந்தனர்.

2006 – இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2011 – துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் உயிரிழந்தனர்.

2015 – பற்றீசியா சூறாவளி மெக்சிக்கோவைத் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1491 – லொயோலா இஞ்ஞாசி, கத்தோலிக்கப் போதகர் (இ. 1556)

1844 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (இ. 1923)

1873 – வில்லியம் டி. கூலிட்ச், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1975)

1875 – கில்பர்ட் நியூட்டன் லூயிசு, அமெரிக்க வேதியியலாளர் (இ. 1946)

1894 – எம்மா வுசோத்சுகி, அமெரிக்க வானியலாளர் (இ. 1975)

1900 – வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்க திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (இ. 1978)

1905 – அ. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (இ. 1975)

1920 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்க அறிவியலாளர் (இ. 1998)

1923 – பைரோன் சிங் செகாவத், இந்திய அரசியல்வாதி (இ. 2010)

1929 – சம்சுர் ரகுமான், வங்காளதேசக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 2006)

1939 – க. வி. விக்னேஸ்வரன், இலங்கை நீதிபதி, 1வது வட மாகாண முதலமைச்சர்

1940 – பெலே, பிரேசில் கால்பந்து வீரர்

1942 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க இயக்குநர் (இ. 2008)

1948 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை அரசியல்வாதி (இ. 2000)

1954 – ஆங் லீ, தாய்வான்-அமெரிக்க இயக்குநர்

1960 – ராண்டி பௌஷ், அமெரிக்க எழுத்தாளர், கணினி அறிவியலாளர் (இ. 2008)

1974 – அரவிந்த் அடிகா, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்

1976 – ரையன் ரெனால்ட்சு, கனடிய-அமெரிக்க நடிகர்

1979– பிரபாஸ், தெலுங்குத் திரைப்பட நடிகர்

1989 – ஜொனிதா காந்தி, இந்தோ-கனடியப் பாடகி

இன்றைய இறப்புகள்


1910 – ஐந்தாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1853)

1921 – ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டிய தொழிலதிபர் (பி. 1840)

1986 – டபிள்யூ. எம். எஸ். தம்பு, இலங்கைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1902)

2010 – அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1918)

2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினியியலாளர் (பி. 1927)

2012 – சுனில் கங்கோபாத்யாயா, வங்காளக் கவிஞர் (பி. 1934)

இன்றைய சிறப்பு நாள்


மோல் நாள்

புரட்சி நாள் (மாக்கடோனியக் குடியரசு)

விடுதலை நாள் (லிபியா)

அமைதி ஒப்பந்த நினைவு நாள் (கம்போடியா)