ஆற்காட்டில் கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன். சரக்கு ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி தமிழரசி (21). இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தமிழரசி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், தம்பதிக் கிடையே சண்டை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டின் ஓர் அறையில் தமிழரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் விசாரணை நடத்தினார்.