உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் பொது வினியோக திட்டம் சிறப்பாக நடை பெற காலாண்டு ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறையின் மூலம் இயங்கி வரும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பொது சேவையில் குறைபாடுகளை களையவும், பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிமை பொருள்கள் அனைத்தும் சீரான அளவில் வழங்கவும், விற்பனையாளர்கள் மீது வரக்கூடிய புகார்களை விசாரணை செய்யும்பொருட்டு, இக்கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் அங்காடிகளின் செயல்பாடு களை குறித்து விவாதிக்கலாம். குறைகள் இருப்பின் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.