கலவை அருகே மனநலம் பாதித்த மூதாட்டிக்கு வெறிநாய் கடித்து மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆதரவற்ற மூதாட்டி கலவை பேரூராட்சியில் மனநலம் பாதிக்கப்பட்டு கலவையில் பல்வேறு இடங்களில் சுற்றி உணவு சாப்பிட்டு வருவது வழக்கம். 

இந்நிலையில், நேற்று மாலை கலவை அடுத்த கணியந்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தெருவில் வெறிநாய் மூதாட்டியை கடித்து குதறியது. இதனால் அவர் அலறி கூச்சலிட்டார். அவ்வழியாக வந்தவர்கள் நாயை விரட்டினர்.

மேலும் மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் இரவு உணவு வழங்கி அனுப்பி வைத்தனர்.