ராணிப்பேட்டை அருகே லாலாபேட்டை கீழாண்டை வீதியில் வசிப்பவர் கீதா (43). இவர், நேற்று முன்தினம் கத்தாரிகுப்பத்திலிருந்து ஆற்காடு செல்லும் அரசு டவுன் பஸ்சில் லாலாபேட்டையில் ஏறினார். அப்போது, பஸ்சில் கூட்டம் அதிகளவில் இருந்ததால், படிக்கட்டு அருகே நின்றிருந்தார்.

பஸ் அக்ராவரம் மலை வளைவில் திரும்பியபோது, பஸ்சி லிருந்து தூக்கி வீசப்பட்ட கீதா கீழே விழுந்ததில் தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.