குறள் : 976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.


மு.வ உரை :

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம் அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.


கலைஞர் உரை :

பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை


சாலமன் பாப்பையா உரை :

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.


Kural 976

Siriyaar Unarchchiyul Illai Periyaaraip

Penikkol Vemennum Nokku

Explanation :

It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.Horoscope Today: Astrological prediction for December 28 2022


இன்றைய ராசிப்பலன் - 28.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


28-12-2022, மார்கழி 13, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 08.45 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சதயம் நட்சத்திரம் பகல் 12.46 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 12.46 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 28.12.2022 | Today rasi palan - 28.12.2022


மேஷம்

இன்று உங்கள் வீட்டில் தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும். 

கடகம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது, வீண் பேச்சை குறைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது உத்தமம்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று குடும்ப உறுப்பினர்களால் மனநிம்மதி குறையும். திடீர் என்று எதிர்பாராத செலவுகள் தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலும் அதற்குக்கேற்ப லாபம் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் நண்பர்களால் கிட்டும்.

தனுசு

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்படும் நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001