சிப்காட் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (29). தமிழரசன் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டிங் வேலை செய்துவந்தார். 

நேற்று மாலை தமிழரசன் வழக்கம் போல் கிரில் கேட் வெல்டிங் அடித்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசன் மீது திடீரென மின்சாரம்தாக்கியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிரிசோதனை செய்த மருத்துவர்கள் தமிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.