ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு - கலவை சாலையில் வந்தவாசியில் இருந்து ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பாலாற்றங்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அதில் 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.