சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட தக்கான்குளக்கரை அருகில் நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் அவர்களின் அன்றாட பணிகளுக்காக இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சைக்கிள் மற்றும் நடந்து சென்றனர். அப்போது பசுமாடு ஒன்று திடீரென சாலையில் சென்ற பொதுமக்களை முட்டத்தொடங்கியது. விரட்டி, விரட்டி முட்டியதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் தயக்கம் காட்டினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையர் பரந்தாமன் மற்றும் சுகாதார ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் சென்று நகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அந்த பசு மாட்டை பிடித்து, கால்களை கட்டி, நகராட்சி வாகனத்தில் ஏற்றி சென்றனர். 

மாட்டின் உரிமையாளர் யார் என்று தெரி யாததால் அவர் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பொதுமக்களை மாடு விரட்டி, விரட்டிமுட்டிய சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.