தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் அவருக்கு வயது முதிர்வு காரணமாக ஏற்படும் வழக்கமான பாதிப்புதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையால் துரைமுருகன் உடனடியாக உடல்நலம் தேறினார்.

அவர் நேற்று மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.