பூட்டுத் தாக்கு ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த 3 மணி நேரத்தில் அதனை திரும்ப பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு ஊராட்சியில் 1வது வார்டு கவுன்சிலராக சித்ரா ஜெகதீசன் உள்ளார்.

இந்நிலையில் தனது வார்டில் எந்த விதமான பணியும் நடைபெற வில்லை என சித்ரா ஜெகதீசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்தினகிரி போலீசில் புகார் செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து, ஊராட்சி மன்றதலைவர், துணைத் தலைவர் ஆகியோரை போலீசார் விசாரித்தபோது தனது வார்டு குறை எதையும் சித்ரா ஜெகதீசன் கூறுவதில்லை என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து, அனைவரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி உள்னர். 

இந்நிலையில், தனது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்ரா ஜெகதீசன் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, பிரபாகரன் ஆகியோரிடம் கடிதம் கொடுத்துள்ளார்..

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை 6 மணி யளவில் சித்ரா ஜெகதீசன் தான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுள்ளார்.

ராஜினாமா கடிதம் கொடுத்த சில மணி நேரத்தில் அதனை திரும்ப பெற்ற சம்பவம் ஆற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதற்காக அவர் ராஜினாமா செய்தார். ஏன் சில மணி நேரத்திலேயே திரும்ப பெற்றார் என்பது புதிராக உள்ளது.