வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் காலமானார்.
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஹரி வைரவன் நள்ளிரவு 12 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் கடந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு, திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வந்தனர். இதனிடையே உடல்நிலை மோசமான நிலையில், இரவு அவரது உயிர் பிரிந்தது. ஹரி வைரவன் இறுதிச் சடங்குகள் இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இதில் திரையுலனிகர் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.